வழக்கில் இருந்து திரும்பியவர் மீது துப்பாக்கிச்சூடு
பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியின் பெட்டிவத்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (09) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலப்பிட்டிய, மஹலதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனவின் கொலையில் பிரதான சந்தேகநபர் ஒருவர் எனவும் இது தொடர்பாக பலப்பிட்டிய நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற வழக்கிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.