பலாங்கொட கஸ்ஸப தேரர் பிணையில் செல்ல அனுமதி
திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடில் ஒன்று அமைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் இன்று முன்னிலைபடுத்தப்பட்ட அவர், தமது மன்னிப்பைத் தெரிவித்ததை அடுத்து, செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது உத்தரவு
குறித்த வழக்கில் கடந்த நவம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் அவருக்கு எதிராகக் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நவம்பர் 16ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமை தொடர்பில் நவம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.