பெண்களிடம் பாலியல் சேட்டை... இளநிலை ஊழியர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
நாடாளுமன்றத்தில் பணிப்பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இளநிலை ஊழியர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற கனிஷ்ட ஊழியர் மூவரையும் தலா 10000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கடுவல நீதவான் சனிமா விஜேபண்டார நேற்று (30-01-2024) உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய இளைய ஊழியர்களான மூவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பாலியல் துஷ்பிரயோக சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்ததாகவும், இது தொடர்பான முறைப்பாடு பொலிஸாரிடம் அளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான செய்திகள்
நாடாளுமன்றத்தில் பெண்களிடம் சேட்டை; மூவர் கைது!