நாயை பொல்லால் தாக்கி கொலை செய்தவர்களுக்கு பிணை
நாய் ஒன்றை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு காலி பிரதான நீதவான் இசுறு நெத்திகுமார இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
காலி பிரதேசத்தில் வசிக்கும் 34 மற்றும் 37 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சகோதரர்கள் இருவரும் காலி, அக்மீமன பிரதேசத்திற்கு முச்சக்கரவண்டியில் சென்றுள்ள நிலையில் வீடொன்றிற்கு முன்பாக இருந்த நாய் ஒன்றை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நாயின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.