பதுளையில் இடம்பெற்ற அசம்பாவிதம்... 4 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்!
Badulla
Hospitals in Sri Lanka
By Shankar
பதுளை - லுணுகலை பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (02-12-2024) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுணுகலை - அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பதற்கு முற்பட்ட தொழிற்சாலை ஊழியர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதன்படி, 29 வயதுடைய ஆணொருவரும், 40 முதல் 56 வயதுக்கிடைப்பட்ட 4 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவரும் லுணுகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US