யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் குழந்தை!
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் பெண் குழந்தை ஒன்று பிறந்து அடுத்த நாளே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவத்தில் 2ஆம் குறுக்குத்தெரு சென்மேரிஸ் வீதி, நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த செல்டன்புஸ் ரோசாமேரி என்ற தம்பதிகளின் குழந்தையே உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குழந்தை கடந்த 17ஆம் திகதி பிறந்த நிலையில் அடுத்த நாளான 18ஆம் திகதி வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குழந்தையின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சிசுவின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளுக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.