யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு உயிரிழப்பு
யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று வாந்தியெடுத்தபின் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சுன்னாகம் - சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பதிகளின் சிசுவே உயிரிழந்தது.
தாயார் இன்று சிசுவிற்கு பாலூட்டி உறங்க வைத்த பின்னர் மதியம் 1.30 அளவில் சிசுவை தூக்கத்திலிருந்து எழுப்பியவேளை சிசு வாந்தியெடுத்துவிட்டு அசைவற்று காணப்பட்டது.
இந்நிலையில், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவேளை, சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும், சிசுவின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.