இந்த மாதம் நிச்சயம் இது நடக்கும் ; பகீர் கிளப்பிய பாபா வாங்காவின் கணிப்பு
உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டிலும் இதெல்லாம் நடக்கும் என பாபா வாங்கா கணித்திருப்பதாக சில கணிப்புகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இயற்கை பேரழிவு
அதுவும் குறிப்பாக இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் சில சம்பவங்கள் நடைபெறும் என்று கணித்துள்ளார். அதுவும் குறிப்பாக இந்த மாதம் மழை, வெள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும், இந்த ஆறுகளால் பல ஊர்கள் அழியும் என்று எச்சரித்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒவ்வொரு சம்பவமாக நிகழ்ந்து வருகிறது.
2025 ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் மழை மற்றும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் உலகம் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பாபா வாங்கா கணித்திருந்தார்.
பாபா வாங்கா எரிமலை வெடிப்புகள் குறித்தும் எச்சரித்துள்ளார். இதில், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை குறித்து ஒரு சிறப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
பாபா வாங்காவின் கணிப்பின்படி, உலகம் வரும் காலத்தில் ஒரு கடினமான ஆண்டை எதிர்கொள்ளும், அது பொருளாதார சரிவாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடும் என்று அவர் கூறியிருந்தார்.