பி.1.1529 வைரஸ் குறித்து பிரித்தானியா அதிகாரிகள் எச்சரிக்கை!
தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய மாற்றமமைடந்த கொரோனாவைரசே இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள வைரஸ்களில் மிகவும் முக்கியமானது என இங்கிலாந்தின் சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த பி.1.1529 வைரஸ் அதிகளவு பரவும் ஆற்றலை கொண்டது தடுப்பூசிகளால் இதனை கட்டுப்படுத்த முடியாது என பிரிட்டனின் சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை இதுவரைநாங்கள் எதிர்கொண்ட வைரஸ்களில் இதுவே குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகவர் அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜெனி ஹரிஸ், அதன் பரவும் தன்மை தீவிரம் மற்றும் தடுப்பூசியால் பலன் உள்ளதா போன்ற விபரங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு பொதுமக்கள் எவ்வாறான விதத்தில் நடந்துகொண்டால் பாதிப்புகளை தவிர்க்கலாம் என்பது குறித்துஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.