பிக்பாஸ் வீட்டில் அசீம் - அமுதவாணனால் குழம்பி போன கதிரவன்! சுவாரஸ்ய காணொளி
தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமடைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதேவேளை 50 நாட்களைக் கடந்துவிட்டபோதும் போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக கடந்த வாரமே கமல்ஹாசன் போட்டியாளர்களை எச்சரித்து இருந்தார்.
அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் ரச்சிதா, மைனா, குயின்சி, ஜனனி, கதிரவன், தனலட்சுமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இதில் ஏலியன் அணியினர் வீட்டின் உள்ளேயும், ஆதிவாசி அணியினர் கார்டன் ஏரியாவிலும் இருக்க வேண்டும். இதனால் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அசீம் ஏலியன்களின் பூவை எடுத்து மறைத்து விட்டார். பின்னர் அந்தப் பூவை பாத்ரூமுக்குள் வைத்து அமுதவாணனிடம் காண்பித்து விட்டார்.
இருந்தாலும் தான் அந்த பூவை யாரே வைத்தது போலவும் இதற்கும் மணிகண்டனுக்கும் தொடர்பு இருப்பது போலவும் செய்து விட்டார். இதனால் மணிகண்டன் குழப்பத்தில் உள்ளதையும் காணலாம்.
Part 1 #ClownAzeem after his Pilli sooniyam Drama . Starts investigating who took the flowers . Question ppl from Alien team. #Azeem coward took the flowers, now blaming others . Thief investigation panran.#BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss6Tamil #Vikraman #vikramanarmy pic.twitter.com/f9GqKf1SK9
— siva (@winsiva1994) December 1, 2022