சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியம்
ஒருமுறை சர்க்கரை நோய் வந்தால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் இனிப்பு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.
சில ஆயுர்வேத பொருட்களை சாப்பிடுவதன் மூலம் குளுக்கோஸின் அளவை நிர்வாகிக்க முடியும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நமது சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டே நீரிழிவு மற்றும் உயர் இரத்த சர்க்கரை பிரச்சனையை சமாளிக்கலாம்.
நாகப்பழ கொட்டை
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நலல்து நாகப்பழக் கொட்டை. நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டுமெனில் நாகப்பழத்தின் கொட்டைகளை வெயிலில் உலர்த்தி, பின்னர் அவற்றை தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்தப் பொடியை, லேசான வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை சாப்பிடுவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இலவங்கப்பட்டையை, பொடி செய்து வைத்து பயன்படுத்தலாம்.
எனவே பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் இதை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
வெந்தயம்
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். நமது தினசரி உணவில் பயன்படுத்தும் மசாலாப் பொருளான வெந்தயம், பலவித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அதை மென்று சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
அதேபோல் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை உட்கொண்டால் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.
அத்தி இலைகள்
நீங்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டிருக்கலாம், ஆனால் அத்தியின் இலைகளின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்திப்பழ இலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. பச்சையாக மென்று உண்ணலாம் அல்லது இலைகளை வேகவைத்து அதன் நீரை அருந்தலாம்.
பூண்டு
உணவின் சுவையை அதிகரிக்க பூண்டு பயன்படுத்தப்பட்டாலும், மருத்துவ நன்மைகளைக் கொண்ட அருமையான உணவுப்பொருள் ஆகும்.
பச்சைப் பூண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவு எளிதில் குறையும்.