காலணியில் பியர் நிரப்பி குடித்த அவுஸ்ரேலிய வீரர்கள்! வெளியான சுவாரஸ்ய பின்னணி
டுபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற ரி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சம்பியனாக தெரிவாகியது.
இதன் பின்னர் உடை மாற்றும் அறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்ரேலிய அணி வீரர்களில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) மற்றும் அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) தங்கள் காலணிகளில் பியர் நிரப்பி குடித்து கொண்டாடினர். எனினும் இதனை சிலர் பார்த்து என்ன காலணியில் பியர் நிரப்பி குடிக்கின்றனர் என வித்தியாசமாக நினைத்தனர்.
மேலும் இது அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமானது என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவில், காலணிகளில் பியர் குடிக்கும் இந்த பாரம்பரியம் ஷூய் (Shoey) என்று அழைக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் இந்த வகையான கொண்டாட்டம் மிகவும் பொதுவானது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 'ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்' போட்டியில் (Australian Formula One star) டேனியல் ரிச்சியார்டோவால் இந்த தனித்துவமான பாரம்பரியத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது.
தற்போது அவுஸ்திரேலியாவில் வீரர்கள் மத்திரமின்றி பல பெரிய கலைஞர்களும் ஒரே மேடையில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், வெற்றியைக் கொண்டாடும் இந்த முறை தற்போது மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. ]
இதேவேளை சமீபத்தில், பிரித்தானியா கார் பந்தய ஓட்டுநர் Louis Hamilton கிராண்ட் பிரிக்ஸ்' மேடை விழாவை இதேபோன்ற காலணிகளில் பீர் குடித்து கொண்டாடியுள்ளார்.
ஆனால் சில கலைஞர்களும் இந்த வழக்கத்தை விரும்பவில்லை. சிட்னியைச் சேர்ந்த 21 வயது கச்சேரி புகைப்படக் கலைஞர் Georgia Mouloney, ஐந்தில் ஒரு படப்பிடிப்பின் போது 'ஷூ' என்ற வார்த்தையைக் கேட்பதாகக் கூறுகிறார்.
சில சமயங்களில் கேட்பதற்கு வினோதமாக இருக்கும், குறிப்பாக ஒரு சர்வதேச கலைஞர் மேடையில் இருக்கும்போது. நிகழ்ச்சியின் போது இதைச் செய்ய நிறைய நேரம் எடுக்கும். உலகிலேயே கலைஞர்களை காலணியில் பியர் குடிக்கச் சொல்லும் ஒரே நாடு அவுஸ்ரேலியா தான் என்று கூறுகிறார்.
காலணியில் பியர் குடித்தால் உடம்புக்கு சரியில்லையா? அத்தகைய சூழ்நிலையில், காலணியில் நிரப்பப்பட்ட பியர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்.
இது குறித்து, மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் Anton Peleg கூறுகையில்,
அநேகமாக இல்லை ஆரோக்கியமான அல்லது சுத்தமான பாதம் உள்ளவரின் காலணிகளில் நிரப்பிய பியர் குடிப்பதால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார்.