அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனம் இலங்கையில் இருந்து முற்றாக விலகல்
அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை கோடிட்டு ஆங்கில ஊடகமொன்று, யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கை சந்தையில் இருந்து முழுமையாக விலகியதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சந்தை பொருத்தமாக இல்லை
குறித்த நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன்னரே தங்களின் வெளியேறும் முடிவை அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த இலாபத்தை அடைவதற்கு இலங்கை சந்தை பொருத்தமாக இல்லை என்பதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறித்த நிறுவனம் அறியப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவன விலகல், பன்முகப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.