முஸ்லிம் வீரருக்காக அவுஸ்திரேலிய கேப்டன் பாட் கிம்மின்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!
2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கிண்ணத்தை பாட் கம்மின்ஸ் தலைமையில் அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் தன்னுடைய சக வீரர்கள் மீது பெரும்பாலும் குறைகூறாமல் அவர்களுக்கு ஆதரவாகவே கம்மின்ஸ் கருத்துக்களை தெளிப்படுத்துபவர்.
தோல்விக்கு கேப்டனாக நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் பாட் கம்மின்ஸ் தோல்விக்கான பழியை சக வீரர்கள் மீது சுமத்துவதை ஒருபோதும் விரும்பாதவர்.
சக வீரர்களின் உணர்வுகளையும் பாட் கம்மின்ஸ் மதிக்கக்கூடியவர். ஆஸ்திரேலிய அணியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா இடம் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சாம்ப்பைன் மது விருந்து அளிப்பார்கள்.
ஆனால், இஸ்லாம் மதப்படி மது அருந்துவது தடை செய்யப்பட்டது என்பதால், அந்த விருந்துகளில் கவாஜா பங்கேற்காமல் இருந்தார்.
இதைக் கவனித்த கேப்டன் பாட் கம்மின்ஸ், சக வீரர்களிடம் இதை எடுத்துக்கூறி, கவாஜாவுக்காக, சாம்பைன் மது விருந்துக் கொண்டாட்டத்தை நடத்தாமல் தவிர்த்தார்.
பாட் கம்மின்ஸும், சக வீரர்களும் தனக்காக சாம்பைன் கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்ற செய்தியை அறிந்த கவாஜா மெய்சிலிர்த்துப் போனார்.
கேப்டன் பாட் கம்மின்ஸ் சக வீரர்களின் உணர்வுகளை மதிக்கும் இந்த செயல்பாடு வீரர்கள் மத்தியில் பெருத்த மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.