புகையிரத பயணிகளின் கவனத்திற்கு ; விசேட போக்குவரத்து திட்டம்
நாட்டில் ஜனவரி 10, 2025 முதல், கொழும்பு கோட்டை - திருகோணமலை விரைவு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்சேவை காலை 08.50 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு, திருகோணமலையை 03.45க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கணேமுல்ல, மீரிகம நிறுத்தப்படாது, (Non Stop) கொழும்பு கோட்டை 08.50a.m மருதானை 08.55a.m ராகம 09.13a.m கம்பஹா 09.26a.m வெயங்கொடை 09.37a.m பொல்கஹவெல காலை 10.13 பொதுஹரா 10.27a.m ரயில் செல்லும் என நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருநாகல் 10.37a.m முத்தேதுகல 10.41a.m வெலவ 10.49a.m கனேவத்த காலை 11.01a.m நாகொல்லாகம 11.04a.m மஹோ சந்தி 11.30a.m - 12.00p.m கோன்வெவா மதியம் 12.13 மணி மொரகொல்லாகம 12.36p.m அவுகானா 12.57p.m கலாவெவ 13.02p.m கெக்கிராவ பிற்பகல் 13.15 பலுகஸ்வெவ 13.34p.m ஹபரண 13.42p.m எனவும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்-ஓயா சந்தி 14.06p.m கந்தளாய் 14.46p.m முள்ளிபொத்தானை 15.02p.m தம்பலகாமம் 15.11p.m சீனக்குடா, 15.31p.m திருகோணமலை 15.45p.m செல்லும்.
கிடைக்கும் வகுப்புகள் :- முதலாம் வகுப்பு ஒதுக்கப்பட்டது (96 இடங்கள், 2900/=) 2ஆம் வகுப்பு ஒதுக்கீடு (124 இடங்கள், 1800/=), 2ஆம் வகுப்பு முன்பதிவு அற்றது. (950/=), 3ஆம் வகுப்பு முன்பதிவு அற்றது (460/=) திருகோணமலை - கொழும்பு ரயில் நேரம் பின்னர் வெளியிடப்படும்.