அவதானம் மக்களே; கோழி இறைச்சி என மட்டிறைச்சி விற்பனை!
இமதுவ நகரில் கோழி இறைச்சி விற்பனை என்ற போர்வையில் மாட்டிறைச்சி மற்றும் எருது இறைச்சியை இரகசியமாக விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோழிக்கறி விற்பனையாளருக்கு கோழிக்கறி விற்பனை செய்வதற்கான உரிமம் உள்ளதாகவும், ஆனால் இவர் நீண்டகாலமாக கோழி இறைச்சி என்ற போர்வையில் மாட்டிறைச்சி மற்றும் மறை இறைச்சி விற்பனை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவல்
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 32 கிலோ மாட்டிறைச்சி மற்றும் 04 கிலோ 500 கிராம் மாட்டிறைச்சியுடன் சந்தேகநபர் சிக்கியுள்ளார்.
இந்த கோழிக்கடைக்கு சற்று தொலைவில் கோவில் ஒன்றும் இருப்பதாகவும், மிக கவனமாக மாட்டிறைச்சி விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கைதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.