16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முயற்சி
மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் வீதியிலுள்ள ஏனைய சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துன் கடந்த வாரம் மன்னார், முல்லைத்தீவு பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.