எரிபொருள் வரிசையில் மருத்துவர் மீது தாக்குதல்!
பெட்ரோல் பங்கில் வைத்தியரும், சுகாதார ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டனர்.
இன்று தெஹியத்தகண்டி நவமெதகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு எரிபொருள் விநியோகத்தின் போது அங்கு வந்த சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் தமக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில்லை என குற்றஞ்சாட்டி, பல அரச வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் இன்று தமது கடமைகளை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிரமமின்றி எரிபொருளைப் பெறுவதற்கு உள்ளூர்வாசிகள் வெளிநாட்டவர்களுக்கு உதவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தெற்கு அதிவேக வீதியுடன் இணைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், அவசர ஊர்திகள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் நிறுத்தப்பட வேண்டியுள்ளது.