அருட்தந்தை மீது தாக்குதல் ; பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கத்தோலிக்க அருட்சகோதரர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சரீரப் பிணை
சந்தேக நபர்கள் அறுவரும் தலா ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது பணி இடைநீக்கமும் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் அடையாளம் காணப்பட்ட மூன்று அதிகாரிகளுள் ஒருவரே தன்னைத் தாக்கியதாகவும் ஏனைய இருவரும் அத் தருணத்தில் அருகில் நின்றவர்கள் எனவும் அருட்சகோதரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.