பொலிஸார் மீது தாக்குதல் ; நீதிமன்ற வளாகத்தில் அதிகரிக்கும் பதற்றம்
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடுமையான தாக்குதல்
போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்குள் கூடிய மக்கள் வீதித் தடைகளை தாண்டி முன்செல்ல முற்பட்டதுடன் பொலிஸாரால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.