பிரதேச சபை தவிசாளர் மீது தாக்குதல்; இருவர் முறைப்பாடு
நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தவிசாளர் மற்றும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இளைஞர் என இரு தரப்பினரும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான தவிசாளர், இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதேபோல், தவிசாளர் தன்னை தாக்கியதாக பொகவன பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். இரு தரப்பினரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.