யாழில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நையப்புடைப்பு!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மந்துவில் பகுதியில் வீதி மின் விளக்குகளை களவாட முயன்ற கும்பலை தடுக்க முற்பட்ட , சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொட்டனால் தாக்கிய கும்பல்
சாவகச்சேரி மந்துவில் பகுதியில் கும்பல் ஒன்று வீதியில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் குமிழ்களை திருடியுள்ளனர்.
இதனை அவதானித்த மக்கள், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு. குகானந்தனுக்கு அறிவித்துள்ளனர்.
அதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த முன்னாள் உறுப்பினர், மின் விளக்குகளை திருடிய நபர்களிடம் அது குறித்து கேட்டபோது, அவர்கள் உறுப்பினர் மீது கொட்டனால் கடுமையாக தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் உறுப்பினரை அயலவர்கள் மீது மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.