சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் மீது தாக்குதல் ; ஐவர் கைது
வெலிமடை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.
நன்னடத்தை நிலையத்தின் ஊழியர்கள் அங்கிருந்த சிறுவர்களை இரும்புக்கம்பிகள் மற்றும் தடிகளால் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழில் படுகொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளர் ; மகள் மற்றும் மருமகனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
குறித்த நிலையத்தில் தங்கியிருந்த 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.