ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு அதிஸ்டம்; அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
2024 ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,
5000 ரூபா சம்பள உயர்வு
“அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வரையிலாவது கொடுக்க வேண்டும்.
இதற்கு மாதம் 65,000 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை ஜனவரி முதல் வழங்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
அதற்கும் 18,000 இலட்சம் ரூபாய் தேவைபடுகிறது. சுமார் ஏழு லட்சம் அரசு ஓய்வூதியர்கள் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதை ஜனவரி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.