ஜனாதிபதியாவது மட்டும் என் இலக்கு அல்ல!
இதுவரை தான் செய்த தியாகங்களின் பலன் கிடைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா, ஜனாதிபதி ஆவது மட்டும் தனது இலக்கு அல்ல என்றும் குறிப்பிட்டார்.
அதோடு, கட்சித் தலைவர்களுக்கிடையிலான போட்டி காரணமாக தன்னால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறினார்.
எனினும், தனக்கு ஆதரவானவர்களும் இருப்பதாகவும், எதிராக இருப்பவர்களும் இருப்பதாக பீல்ட் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டை மாற்றுவதே தனது நோக்கம் என கூறிக்கொண்டு 12 வருடங்களாக ஜனாதிபதியாக பதவியேற்காமல் அரசியலில் தாம் ஈடுபட்டதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.