சனிக்கிழமையில் மறந்தும் கூட இந்த பொருட்களை வாங்கி விடாதீர்கள்
சனிக்கிழமை என்றாலே அது சனிபகவானுக்குரியது. அவ்வாறு இருக்கையில் ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம் தருவதாக அமையும். அதே போல ஒவ்வொரு பொருட்களையும் குறிப்பிட்ட கிழமைகளில் வாங்கும் பொழுது சில சமயங்களில் துரதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அந்த வகையில் சனிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்காதீர்கள் என சாஸ்திரம் கூறுகிறது.
சனிக்கிழமையில் எந்தெந்த பொருட்களை வாங்க கூடாது என நாம் இங்கு பார்ப்போம்.
சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக் கூடாது. இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்காதீர்கள். அப்படி வாங்கினால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும்.
ஆனால் இரும்பு பொருளை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் கடன் தீரும் என்பது நம்பிக்கை. தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம்.
சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக்கூடாது. சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதாவது சனிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால் எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்த நாள் அல்ல.
உப்பை எப்பொழுதும் சனிக்கிழமையில் வாங்காதீர்கள். வெள்ளிக்கிழமைகளில் வாங்குவதுதான் சிறப்பு. சனிக்கிழமையில் உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நஷ்டங்களை சந்திப்பீர்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி பூஜை அறையில் வைப்பது நல்லது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அதனால் வெள்ளி கிழமையில் மட்டுமே வாங்க வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்.
அதுபோலவே வீட்டை சுத்தம் செய்யக் கூடிய பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது.
சனி பகவானுக்குரிய எள்ளையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. ஆனால் எள் எண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் சகல செல்வாக்கும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை
ஆயுதங்கள், கூர்மையான பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது.