50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சந்திர கிரகணம் ; சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் கும்ப ராசியில் இருப்பார். இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இப்படிப்பட்ட சனி பகவான் இந்த நிகழ்வின் போது வக்ர நிலையில் இருப்பார். அதுவும் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார்.
இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் வக்ரமாக இருக்கும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மிதுனம்
சந்திர கிரகணத்தின் போது சனி வக்ரமாக இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். படைப்பாற்றலும், தலைமைத்துவ திறன்களும் மேம்படும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம் அல்லது முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், சிறப்பான பலனைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
சந்திர கிரகணத்தின் போது சனி வக்ரமாக இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்வீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீரென்று நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மீனம்
சந்திர கிரகணத்தின் போது சனி வக்ரமாக இருப்பதால் மீன ராசிக்காரர்கள் சமூகத்தில் பிரபலமாவார்கள். மேலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். காதலித்து வந்தால், அந்த காதல் ஆழமடையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். இருப்பினும், ஏழரை சனி நடப்பதால், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.