அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கைக்கு வருகை !
ஜப்பானினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி எதிர்வரும் 7 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. \
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்படுகின்றன. முன்னதாக ஜப்பானினால் வழங்கப்பட்ட 7 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டில் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடுப்பூசி தொகை வழங்கப்படுவதாக ஜப்பான் தூதுவர் அக்கிரா சுகியாமா தெரிவித்துள்ளார். கொவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இந்த தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்படுகின்றன.
ஜப்பானிடம் இருந்து 1. 456 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.
இதன் முதல் தொகுதியான 728, 460 தடுப்பூசிகள் கடந்த சனிக்கிழையன்று நாட்டை வந்தடைந்திருந்தன.
மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 மத்திய நிலையங்களில், நேற்று முதல் இந்தத் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.