2,000 கோடிக்கு ஆசியாவின் ராணியை விற்பனை செய்ய மறுக்கும் இலங்கை!
ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்து,
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினக்கல்லான 'ஆசியாவின் ராணி' எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 2,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு வாங்குவதற்கு செய்ய டுபாய் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.
குறித்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை. டுபாய் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலையை அறிவித்திருந்தது.
இதனை விடவும் அதிக விலை எதிர்பார்ப்பில் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்திலுள்ள சுரங்கமொன்றிலிருந்து 310 கிலோகிராம் எடையுடைய 'கொரண்டம்' வகை மாணிக்கக்கல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.