மீண்டும் பதவிக்கு வரும் ஆஷு மாரசிங்க!
ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் அந்த சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரந்தனாவின் வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
ஆசு மாரசிங்க தனது பதவி இராஜினாமா
அது தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து , பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஆதர்ஷா கரந்தனா நடத்தி ஆஷு மாரசிங்க மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரந்தனவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் கோரி ஆஷு மாரசிங்க வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.