பிக்பாஸ் வீட்டில் கேமரா முன் கண்கலங்கி பேசிய அசீம்! என்ன நடந்தது?
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
சுமார் 85 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டியுள்ளது.
அவ்வாறான சூழல் நிலையில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக விளையாடி ஆக வேண்டுமென்ற நிலையும் உள்ளது.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.
நிறைய கடினமான டாஸ்குகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி வந்த நிலையில் சக போட்டியாளரான அழுதவாணன் சிறப்பாக விளையாடி Ticket To Finale வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் டாஸ்குகள் முடிந்து தூங்க செல்வதற்கு முன் தனது மகன் ரயான் குறித்து நிறைய விஷயங்களை மனம் உருக பிக் பாஸ் வீட்டில் பேசி உள்ளார் அசீம்.
அப்படி இருக்கையில், சமீபத்தில் மகனின் பிறந்த நாள் என்றும் தெரிகிறது. இதனை முன்னிட்டு கேமரா முன்பு பேசும் அசிம், "இன்னைக்கு என் பையன் ரயானுக்கு பிறந்தநாள். ஹாப்பி பர்த்டே ரயான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எப்பவும் எல்லா வருஷமும் உன்ன பார்ப்பேன், உன் கூட இருப்பேன். இந்த வருஷம் உன் கூட இருக்க முடியல. Finale முடிச்சிட்டு, டைட்டில் வின் பண்ணிட்டு உன்னை வந்து பார்க்குறேன். லவ் யூ பேபி. ஹாப்பி பர்த்டே" என கூறியபடி கண் கலங்கும் அசீம், அங்கிருந்து சென்று சோபாவில் படுத்து அழுது கொண்டிருந்தது பார்ப்பவர்களை கலங்கடித்துள்ளது.