காலிமுகத்திடலில் மக்கள் புரட்சியாளர்களுக்காக தயார் நிலையில் தற்காலிக தங்குமிடம், உணவு, மருத்துவம்
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான சூழலை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஜனாதிபதி பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டமானது உலகமுழுவதும் கடந்த சில தினங்களாக பேசு பொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் புரட்சிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவர்க்கும் தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களாக கனமழை பெய்த நிலையிலும் மக்கள் கொந்தளிப்பான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான தற்காலிக மலசலகூடம், உணவு மற்றும் மருத்துவம் ஆகிடாவை தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




