அறுகம்குடா விவகாரம்; அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க நீதி திணைக்களம்!
அம்பாறை - அறுகம்குடா தாக்குதல் அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பில் அமெரிக்க நீதி திணைக்களம் அதிர்ச்சித் தக்லவலொன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்களை தீட்டிய நபரிடம் ஒக்டோபர் மாதம் இலங்கை அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையே இந்த திட்டத்தை ஒப்படைத்திருந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அண்மையில் அறுகம்குடாவில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அமெரிக்காவின் அந்த எச்சரிக்கையினை தொடர்ந்து பிரித்தானியா, கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் தமது பிரஜைகளுக்கு பயண் எச்சரிக்கையினை டுத்திருந்தன. இதனையடுத்து அறுகம் குடாவில் அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.