வவுனியாவில் 5 கிலோ அம்பருடன் கைது
வவுனியாவில் சுமார் 5 கிலோ எடையுடைய அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வைத்திருந்த சுமார் 5 கிலோ அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்டதுடன், உடமையில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்பர்கிரிஸும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.