யாழ் சிறைச்சாலை மேல் “ட்ரோன்” பறக்க விட்டவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் (13) மாலை வேளை “ட்ரோன்” பறந்துள்ளது. “ட்ரோன்” பறப்பதை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் “ட்ரோனை” பறக்க விட்ட இளைஞனை கைது செய்ததுடன் , ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் காணொளிகளை பதிவு செய்வதற்காக , வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் , சிறைச்சாலைக்கு அருகில் வீதியில் அமைக்கப்படும் பாலத்தை காணொளி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் ட்ரோன் ஊடாக எடுத்த காணொளிகளை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.