மட்டக்களப்பு விமானப்படை தளத்துக்குள் நுழைந்தவர் அதிரடியாக கைது!
மட்டக்களப்பு விமான நிலைய விமானபடைத் தளத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்த ஆண்ணொருவர் இன்று அதிரடியாக கைது செய்ய்யப்பட்டுள்ளார்.
குறித்த விமான நிலையத்தில் பல்வேறு தரப்பட்ட வேலைகளில் ஊழியர்களாக வேலை செய்துவரும் நிலையில், பணியாளர்கள் தினமும் விமான நிலையம் சென்று பணியாற்றிவிட்டு மாலையில் வீடுதிரும்பி வருவது வழக்கமாகும்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் வழமைபோல விமானநிலையத்துக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்களுடன் பணியாளராக விமானநிலைத்திற்குள் விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக வாழைச்சேனை மீராவேரடயைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் நுழைந்துள்ளார்.
இவ்வாறு உள்நுழைந்தவர் அங்குள்ள விமானபடை தளப்பகுதிக்கு சென்ற நிலையில் சந்தேகம் கொண்ட விமானப்படையினர் அவரிடம், அனுமதி அட்டையைக் கேட்டுள்ளனர்.
எனினும் குறித்த நபர் தேசிய அடையாள அட்டையை காட்டியதனையடுத்தே, சந்தேகம் கொண்ட படையினர் அவரை கைது செய்துள்ளனர். கைதானவர் வாழைச்சேனை பிரதேச செயலத்தில் கடமையாற்றிவருபவர் என கூறப்படுகின்றது.
இந்தநிலையில் , விமான நிலையத்தை பார்ப்பதற்காக, இவ்வாறு சென்றதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கைது செய்த விமானப்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக மட்டு தலைமையக பொலிஸாரிடம் அவரை ஒப்படைந்த நிலையில் , மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.