ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிடியாணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் ஒன்றை மேற்கொண்ட சம்பவத்துக்கு எதிரான வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த குற்றச்சாட்டில் ஹிருணிகா உள்ளிட்டோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்றைய தினம் (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த வழக்குடன் தொடர்புடைய ஹிருணிகா உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே பிடியாணை உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.