யாழில் வீடு சுத்தம் செய்தவருக்கு அதிர்ச்சி ; இராணுவ அங்கியும் வெடிபொருளும்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், குறித்த அங்கி இராணுவத்தினர் வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தும் அங்கி எனத் தெரியவந்துள்ளது.
அந்த அங்கியில் நீண்ட காலமாக காணப்பட்ட வெடிக்கக்கூடிய பொருட்கள் இருந்தமையும் பொலிஸாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நீதிமன்றத்தின் உரிய அனுமதியைப் பெற்று குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.