விசாரணை நடத்த சென்ற இராணுவ வீரருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மினுவாங்கொடை - நில்பனாகொட பகுதியில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மற்றொருநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (01-02-2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் நில்பனாகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் இராணுவ வீரராக பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் (31-01-2024) அதிகாலை இராணுவ வீரரின் வீட்டிற்குள் புகுந்த திருடன் அவரது மனைவிக்கு சொந்தமான தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.
அது தொடர்பில் குறித்த நபரிடம் விசாரணை நடத்த சென்ற போது சந்தேக நபர் இராணுவ வீரரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.