தனிமைப்படுத்தலில் இருந்தவர்மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்; நேர்ந்த கதி
தனிமைப்படுத்தலுக்காக பெந்தோட்டை விடுதியிலிருந்த நபர் மீது இராணுவச் சிப்பாய் நடத்திய தாக்குதலில் குறித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குவைட் நாட்டிலிருந்து நாடு திரும்பிய சம்பத் எதிரிசிங்க என்பவரே இவ்வாறு சிப்பாயில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் தனிமைப்படுத்தலுக்காக பெந்தோட்டை விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில், சுமார் மூன்றரை இலட்சம் ரூபா அவர் இதற்காக செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குருநாகல் – வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த நபர், களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.