தமிழர் பகுதியில் மர்ம பொருளுடன் வசமாக சிக்கிய இராணுவ அதிகாரி - இளைஞன்!
முல்லைத்தீவு பகுதியொன்றில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றையதினம் (09-03-2024) புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ள சோதனை நடவடிக்கையின் போது 10 கிராம் கஞ்சாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சோதனை நடவடிக்கையின் போது, தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன் மேஜரும், உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனுமே கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரையும் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய போது இருவரிடமும் போதை பாவனை உறுதி செய்யப்பட்டது.
குறித்த இருவரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.