விபத்துக்குள்ளான இராணுவத்தின் கனரக வாகனம்: சாரதி கவலைக்கிடம்
ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில், இராணுவனத்தினரின் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக த்கவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதான வீதியின் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில் இன்று (01) புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த விபத்து சம்பவத்தில், இராணுவத்தினர் இருவர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த இராணுவ வாகன சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்விபத்து தொடர்பில் தெரியவருவது, வெலிகந்த – புனானைப் பகுதியிலுள்ள இராணுவ முகாமிலிருந்து ஹிங்குராங்கொட பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
குறித்த விபத்தின்போது மின் கம்பத்துக்கு அருகில் இருந்த வீட்டின் மீது இராணுவ வாகனம் மோதியுள்ளது, இதேவேளை வீட்டில் இருந்த எவருக்கும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.