ஜனாதிபதி அனுரவை சந்தித்த இராணுவத் தளபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கேப்டன் விஜய்காந் திரைப்பட சம்பவம்; உயிரிழந்த நபருக்கு உணவு கட்டணம்: மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம்
தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர், அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப்படி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சம்பிரதாய ரீதியாக நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டதுடன், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.