ஊடகவியலாளர் மீது இராணுவம் கொடூர தாக்குதல்! தடைய பொருள் சிக்கியது
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நிலையில் ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுக்க சென்றபோதே, ஊடகவியலாளரை “ஏன் அதனை புகைப்படம் எடுக்கின்றாய்” என கேட்டே இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, தாக்குதல் நடத்திய பகுதிக்குச் சென்ற பொலிஸார் விஷ்வா தாக்குதலுக்கு உள்ளாகி வீழ்ந்த இடத்திலிருந்து தடயப் பொருள் ஒன்றை மீட்டுள்ளனர்.
அதில் முள்ளுக்கம்பி சுற்றப்பட்டுக் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த தடயப் பொருளை பொலிஸார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.