நீங்கள் கடலை மிட்டாய் பிரியரா? தவறாமல் இந்த வீடியோ பாருங்கள்
உங்களுக்கு கடலை மிட்டாய் மிகவும் பிடிக்குமா? கடலை மிட்டாய் எவ்வாறு தயாரிக்கிரார்கள் தெரியுமா? ரூசிச்சி சாப்பிடும் இந்த கடலை மிட்டாயை இவ்வாறா செய்கிறார்கள். அப்படியானால் இந்த வீடியோவை கட்டாயம் ஒரு முறை பார்க்கவும்.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் தொழிற்சாலையில் கடலை மிட்டாய் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், வெறும் தரையில் பாகு வெல்லம் மற்றும் வறுத்த வேர்க்கடலையை ஒன்றாக கலப்பதை நாம் காணலாம். பாகு வெல்லம் மற்றும் வேர்க்கடலை பரப்பப்பட்ட இடத்தில், அங்கு வேலை செய்பவர் தனது காலால் இதை சமம் செய்ய அதில் நடப்பதைக் காணலாம்.
மேலும் மற்றொருவர் கலவையை வெறும் தரையில் பரப்பி ஒரு சப்பாத்தி செய்யும் ரோலில் பரப்பி பின்னர் வெட்டப்படுகிறது.
இதற்குப் பிறகு, அவை தரையில் தனியாக வைக்கப்படுகிறது. இந்த கடலை மிட்டாய் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் கடலை மிட்டாய் தயாரிக்கும் முறையைப் பார்த்து மக்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுகிறார்கள், மேலும் கடலை மிட்டாய் இவ்வளவு அழுக்காக செய்யப்படுகிறதா என்று ஆச்சரியப்பட்டு தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.