நீண்ட நேரம் தூக்குபவர்களா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கை தகவல்
பொதுவாக நல்ல உறக்கமின்மை என்பது அறிதிறன் குறைபாட்டுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. மனநோயுடன் தொடர்பு படுத்தப்படுகிறது, அனைத்துக்கும் மேலாக அல்ஷைமர் நோய் என்றும் பெருமறதி நோயுடன் தொடர்புப் படுத்தப்படுவதாகும். இதுதவிர இன்சோம்னியா போன்ற நோய்களுடனும் தொடர்புப் படுத்தப்படுகிறது.
இதேவேளை வாஷிங்டன் பல்கலைக் கழக மருந்து ஆய்வு பிரிவு மேற்கொள்ளும் ஆய்வில் எப்படி தூக்கமின்மை பிரச்சனையோ அதே போல் அதிக தூக்கமும் பிரச்சனைதான் என்கிறது. இதனாலும் அறிதிறன் குறைபாடு ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும், எவ்வளவு மணி நேரத் தூக்கம் அறிதிறன் குறைபாட்டில் கொண்டு வந்து விடுகிறது என்பதை வாஷிங்டன் பல்கலைக் கழக மருந்து ஆய்வு பிரிவு மேற்கொண்டது. இதற்காக 70 வயதுக்கும் மேற்பட்டோர் ஆனால் 80 வயதுக்கும் குறைவான 100 பெரியோர்களை வைத்து ஆய்வு செய்தனர்.
இந்த வயதுடையவர்களை வைத்து 4-5 ஆண்டுகள் ஆய்வு நடத்தினர். அப்போது 88 பேருக்கு மனச்சிதைவு நோய் அறிகுறிகள் இல்லை. 12 பேருக்கு அறிதிறன் குறைபாடு இருப்பது தெரிந்ததோடு ஒருவருக்கு மிதமான மனச்சிதைவு நோயும், 11 பேருக்கு மனச்சிதைவு நோய்க்கு முந்தைய அறிதிறன் குறைபாட்டுத் தன்மையும் உள்ளன.
இந்த ஆய்வின் போது அவர்களிடம் பொதுவாக அறிதிறன் சோதனைக்கான கேள்விகளும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் அறிதல் வீழ்ச்சி ஏற்பட்டு மனச்சிதைவு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர். இதில் அதிக ஸ்கோர் செய்பவர்களுக்கு அறிதிறன் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை என்று தெரிந்து விடும்.
தூக்கத்தை இஇஜி அதாவது சிங்கிள் எலெக்ட்ரோட் என்கெபலோ கிராபி முறை மூலம் கண்காணிக்கின்றனர். இதை பங்கேற்பாளர்கள் தூங்கும் போது தலையில் அணிய வேண்டும். 4 அல்லது 6 இரவுகள் தூக்க நேரம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் மூளைச் செயல்பாட்டை மிகவும் துல்லியமாக மருத்துவ விஞ்ஞானிகள் அளந்து விடுகிறார்கள்.
இதேவேளை பங்கேற்பாளர்களின் வயது, மரபணுவியல், மனச்சிதைவு நோய்க்குக் காரணமாகும் புரதமான பீட்டா அமிலாய்ட் அல்லது tau, ஆகியவை உருவாகும் அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
மேலும் இந்த ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டது என்னவெனில் நான்கரை மணிக்கும் குறைவான தூக்கம், அல்லது ஆறரை மணி நேரத்துக்கும் அப்பால் தூங்குவது. நன்றாக உறங்காமல் தொந்தரவுகளுடன் கூடிய உறக்கம் ஆகியவற்றினால் மனச்சிதைவு நோய், அல்ஜைமர் எனும் பெருமறதி நோயும் ஏற்படும் என்பதைக் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இருப்பினும் இந்த பரிசோதனைகளின் பாதிப்பு என்னவெனில் ஒருவருக்கு ஏற்கெனவே மனச்சிதைவு, அல்ஜைமர் நோய்களுக்கான அறிகுறிகள் இல்லாமல் அவர்கள் ஆரறை மணி நேரங்களுக்கும் மேல் தூங்கினால் இந்தப் பரிசோதனை எப்படி மனச்சிதைவு நோயை கண்டுப்பிடிக்கும் என்பது தெரியவில்லை. முதலில் மனச்சிதைவு ஏற்படுவதற்கு நீண்ட தூக்கம் அல்லது தூக்கமின்மை மட்டுமே எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதையும் ஆய்வு விளக்கவில்லை.
மாறாக உறக்கம் என்பது பகலில் நம் உடல் உற்பத்தி செய்த தீங்கு விளைவிக்கும் புரதங்களை இரவில் உறங்கும்போது நாம் வெளியேற்றுகிறோம். அதாவது மனச்சிதைவு நோய்க்குக் காரணமாகும் புரோட்டீன்களை வெளியேற்றுகிறோம். ஒரு இரவு தூங்காவிட்டால் கூட பீட்டா அமிலாய்ட் புரோட்டீன் உற்பத்தி அதிகரித்து மூளையை பாதிக்கும் என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.