அதிக அளவில் ஆரஞ்சு சாப்பிடுபவரா நீங்கள்; இதில் கவனமாக இருங்கள்!
ஆரஞ்சு ஒரு ஆரோக்கியமான உணவாகும். இது குளிர்காலத்தில் நீரேற்றமாக இருக்க உதவுகிறது. அதோடு நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வைட்டமின் C யை ஆரஞ்சு ஏராளமாக வழங்குகிறது.
ஆனால் நீங்கள் ஆரஞ்சு உட்கொள்ளலில் கவனமாக இருப்பது முக்கியம்.

ஏனெனில் 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 47 கிராம் கலோரிகள், 87 கிராம் தண்ணீர், 0.9 கிராம் புரதம், 11.8 கிராம் கார்போஹைட்ரேட், 9.4 கிராம் சர்க்கரை, 2.4 கிராம் நார்ச்சத்து மற்றும் 76% வைட்டமின் C (தினசரி மதிப்பு) உள்ளது.
இது ஊட்டச்சத்து நிறைந்ததாக இருந்தாலும், இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் C உள்ளது. எனவே இதை சிறிய அளவில் உட்கொள்வது சாலச் சிறந்தது.
அதிக அளவில் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்
ஒருவர் ஆரஞ்சுப் பழங்களை அதிக அளவில் உட்கொள்ளத் தொடங்கினால், உதாரணமாக ஒரு நாளைக்கு 4-5 ஆரஞ்சு என்றால், உடலில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து வயிற்றுக் கோளாறு, தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குமட்டலைத் தூண்டும்.

அதேபோல், வைட்டமின் C அதிகமாக உட்கொள்வதால் நெஞ்செரிச்சல், தலைவலி, வாந்தி மற்றும் தூக்கமின்மை கூட ஏற்படலாம்.
யாரெல்லாம் ஆரஞ்சு உண்ணக்கூடாது?
ஆரஞ்சுப் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவையாக இருப்பதால், சில சமயங்களில் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயால் (GERD) பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
GERD நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
இல்லையெனில், இது சில சமயங்களில் GERD நோயாளிகளுக்கு மேற்கூறிய நெஞ்செரிச்சல் மற்றும் வாந்தி உட்பட குறிப்பிடத்தக்க செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும்.

எனவே , தங்கள் உடலில் அதிக பொட்டாசியம் அளவு உள்ளவர்கள் ஆரஞ்சு சாப்பிடுவதற்கு முன், மருத்துவரை அணுக வேண்டும் என சொல்லப்படுகின்றது.
ஆரஞ்சுப் பழத்தில் மிதமான அளவு பொட்டாசியம் மட்டுமே உள்ளது. ஆனால் ஏற்கனவே அதிக பொட்டாசியம் அளவைக் கொண்ட உடலில், கூடுதல் உட்கொள்ளல் ஹைபர்கேமியா எனப்படும் தீவிரமான நிலையை ஏற்படுத்தக்கூடும்.
இது குமட்டல், பலவீனம், தசை சோர்வு மற்றும் அரித்மியாவுக்கு வழிவகுக்கும். தீவிர நிகழ்வுகளில், இந்த நிலை உயிருக்கு ஆபத்தானதாக கூட இருக்கலாம்.

அதேவேளை நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழங்களை சாப்பிடும் முன், அவர்களின் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுக வேண்டும் என பரிந்துரைக்கப்படுகின்றது.