இந்த சிறிய பழத்தில் இவ்வளவு நன்மைகளா?
செர்ரி பழங்கள் இவை குளிர்ந்த பிரதேசங்களில் அதிகம் விளையும் பழங்கள் ஆகும் இந்த பழங்களை சாப்பிடுவதானால் நமக்கு அதிக நன்மைகள் ஏற்படுகின்றன.
செர்ரி பழங்கள் உடல் எடை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. அதோடு செர்ரிப் பழமானது அதிக நார்ச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இதனால் உடலின் கெட்ட கொழுப்பினைக் குறைத்து, உடல் எடையினை சீராகப் பராமரிக்க உதவுகின்றது.
செர்ரிப் பழம் இயற்கையாகவே மிகவும் சிறப்பான செரிமான சக்தியினைக் கொண்டுள்ளது. செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருவதுடன் . மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
காலை மற்றும் மதிய வேளைகளில் செர்ரி பழங்களை வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
அத்துடன் புற்று நோய்க்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை சாப்பிட்டு வருபவர்கள், தினமும் சிறிது செர்ரி பழங்களை சாப்பிட்டு வருவதால் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை இது தடுக்கும்.
செர்ரி பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும். எனவே இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். செர்ரி பழங்கள் சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும்.
கண்பார்வை மங்குதல், மாலை மிகவும் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலமாக இருக்க விரும்புபவர்கள் செர்ரி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.