இனவாத பிரச்சினைக்கு விகாரைகளா காரணம்? சமூக ஆர்வலரின் குற்றச்சாட்டு
திருகோணமலையில் இருக்கும் விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் அதன் நோக்கங்கள் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் திருகோணமலையில் சமீப காலமாக இடம்பெருகின்ற இனவாத பிரச்சினை தொடர்பில் சில கருத்துக்களை சமூக ஊடக பதிவொன்றில் விளக்கியுள்ளார்
தொடர்ச்சியாக தெற்கில் செய்யப்படும் பொய்ப் பரப்புரைகளை முறியடிக்க வேண்டிய தேவையும், இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் பொய்ப்பரப்புரைகளையும் நாம் முறியடிக்க வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விகாரை வீதியில் உள்ள விகாரை பஸ் நிலைய புத்தர் சிலை, சங்கமித்த விகாரை மற்றும் கொகன்ன விகாரைகள் தொடர்பாக அந்தந்த இடங்களில் இருந்து அதன் வரலாற்றையும் நோக்கத்தையும் பற்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த காணொளியில் அவர் தெரித்ததாவது,
காலம் காலமாக இருக்கும் விகாரைகளை சுற்றி தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றார்கள் அது இப்போது பிரச்சினை இல்லை.
தற்போது புத்தர் சிலைகளை கடற்கரைகளிலும் வேறு பல பொது இடங்களிலும் வைத்து இனவாதத்தை தூண்டும் செயற்பாடு இடம்பெறுகின்றது அதுதான் இங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.


