EPF வைப்புத்தொகை வட்டிக்கு பாதிப்பா?
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை காரணமாக EPF வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் 09% வட்டி பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.
அதேபோல் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையிலிருந்து வங்கி அமைப்பு விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வங்கி அமைப்பு ஏற்கனவே 50% க்கும் அதிகமான வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) முற்பகல் நடைபெற்ற உள்நாட்டுக் கடன் உகப்பாக்கம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் 57 மில்லியன் வைப்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமென உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் திறைச்சேரி உண்டியல்கள் 12.4% புதிய வட்டி வீதத்துடன் 2024 ஆம் ஆண்டு வரை மீண்டும் வெளியிடப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.